பாலிடெக்னிக் தேர்வு முடிவு 2026 வெளியீடு | Diploma Result link, Download Mark sheet | Polytechnic Exam Result October 2025
தமிழகத்தில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கக்கூடிய டிப்ளமோ மாணவர்களுக்கான அக்டோபர் மற்றும் நவம்பர் 2025 இல் நடைபெற்ற பருவத் தேர்வுக்கான தேர்வு முடிவுகளை இன்று ஜனவரி 6 2026 வெளியிட்டுள்ளது தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் சென்னை.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படிக்கக்கூடிய பல்வேறு பாடப்பிரிவுகளில் பயிலக்கூடிய டிப்ளமோ மாணவர்களுக்கான பருவத் தேர்வானது கடந்த அக்டோபர் மாதம் செய்முறை தேர்வு தொடங்கி நவம்பர் மாதம் கருத்தியல் தேர்வுகள் நடைபெற்றன.
இந்த தேர்வுகளுக்கான மதிப்பீட்டு பணி ஆனது இந்த ஆண்டு பருவ தேர்வு முதல் ஆன்லைன் முறையில் மதிப்பீட்டு பணியானது நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாணவர்களுக்கான செய்முறை தேர்வு முடிவுகள் மற்றும் கருத்தியல் தேர்வு முடிவுகள் மேலும் ஒவ்வொரு பாடங்களுக்கான அக மதிப்பெண்கள் அந்த கல்லூரிகளில் இருந்து பெறப்பட்டு தற்போது இந்த தேர்வு முடிவை தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது.
Diploma Exam Result link
தேர்வு முடிவுகளை மாணவர்கள் இந்த இந்த லிங்கை Result கிளிக் செய்வதன் மூலம் பார்க்கலாம்
Social Plugin