பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.


பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் (சிறிய ரக கணினி) வழங்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
மேலும் ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலனிக்கு பதிலாக 'ஷூ' வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டப்பேரவை தொகுதிக்குள் உள்ள முதலியார் பாலம் ஊராட்சியில் வீட்டு வசதி வாரிய பிரிவு பல்லடம் அருகே உள்ள மங்கலம் பெருமாநல்லூர் ஆகிய இடங்களில் தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளிகளுக்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன் இந்த தகவலை தெரிவித்துள்ளார் அண்டை மாநிலங்களில் அனைத்து வகுப்புகளும் பள்ளிகளில் திறக்கப்பட்டுள்ளன ஆனால் தமிழகத்தில் படிப்படியாகத்தான் பள்ளிகளைத் திறந்து வருகிறோம் விருப்பப்பட்ட மாணவர்கள் மட்டுமே பள்ளிக்கு வரலாம் என்பதால் கரோனா குறித்த அச்சம் தேவையில்லை. தமிழகத்தின் முன்னாள் மாணவர்கள் அமைப்பு சார்பில் ரூபாய் 315 கோடி மதிப்பில் அரசு பள்ளிகளில் சுற்றுச்சுவர் கட்டுதல் பள்ளி பராமரிப்பு வகுப்பறை கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார்.

Related Posts

கருத்துரையிடுக