இன்று 23.10.2025 பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள்
தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலும் பரவலாக பெய்தது மழை. தாழ்வான இடங்கள், குடியிருப்புகளை சூழ்ந்தது மழைநீர்.
தருமபுரி தீர்த்தமலையில் 7 மணி நேரத்தில் 18 சென்டி மீட்டர் மழை கொட்டியது. அரூர் சாலையில் காட்டாற்று வெள்ளம் பாய்ந்தது.
தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை. தொடர் மழை காரணமாக மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டையில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. வங்கக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்தம் தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் என்று வானிலை மையம் தகவல்...
தொடர் மழையால் தமிழ்நாடு முழுவதும் 15 அணைகள், 1,500-க்கும் மேற்பட்ட ஏரிகள் நிரம்பின. விவசாயிகள் பெரு மகிழ்ச்சி; வேளாண் பணிகளும் தீவிரம்.
சாத்தனூர் அணையில் இருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றம். தென் பெண்ணை கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.