how to update epf e nomination | epf e nomination last date extended | PF முக்கிய அப்டேட்: நாமினி இணைக்கும் தேதியில் கால அவகாசம்

 

PF முக்கிய அப்டேட்: நாமினி இணைக்கும் தேதியில் கால அவகாசம்

கடந்த சில நாள்களாக நாமினி விவரங்களை கணக்குடன் இணைக்கமுடியவில்லை என பலரும் தொடர்ச்சியாக புகாரளித்துக்கொண்டிருந்தனர்.

தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) திட்டம் செயல்படுகிறது. ஊழியரும், நிறுவனமும் கணிசமான தொகையை, இந்த வருங்கால வைப்பு நிதி திட்டத்தில் பங்களிப்பு செய்கின்றனர்.

பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் நாமினி விவரங்களை கட்டாயமாக தங்களது கணக்குடன் டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன்னர் இணைக்க வேண்டும் என இபிஎஃப்ஓ தெரிவித்திருந்தது.

இந்நிலையில், டிசம்பர் 31 ஆம் தேதிக்கு பிறகும் நாமினி விவரங்களை கணக்குடன் இணைக்கலாம் என இபிஎஃப்ஓ ட்வீட் செய்துள்ளது பயனர்களிடம் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.


ஏனென்றால், கடந்த சில நாள்களாக நாமினி விவரங்களை கணக்குடன் இணைக்கமுடியவில்லை என பலரும் தொடர்ச்சியாக புகாரளித்துக்கொண்டிருந்தனர். இதன் காரணமாக, இந்த நடவடிக்கையை இபிஎஃப்ஓ அதிகாரிகள் எடுத்திருக்கலாம் என கூறப்படுகிறது.

பிஎஃப் உறுப்பினர் ஒருவேளை திடீரென இறந்துவிட்டால் அவரது நாமினிக்குத்தான் பிஎஃப் பலன்கள் கிடைக்கும்.னவே நாமினியை தேர்வுசெய்வது கட்டாயமாகும். ஏற்கெனவே நாமினியைத் தேர்வுசெய்தவர்களும் அதை அப்டேட் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PF கணக்குடன் நாமினி விவரங்களை இணைப்பது எப்படி?

  • பிஎப் தளத்தில் அதிகாரப்பூர்வ பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
  • பின்னர், Service ஆப்ஷனில் Employees செக்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
  • அடுத்து, திரையில் தோன்றும் பக்கத்தில் Member UAN / Online Service ஆப்சனைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • இப்போது உங்களுடைய UAN நம்பர் மற்றும் பாஸ்வேர்டு கொடுத்து லாகின் செய்யவும்.
  • அடுத்ததாக, MANAGE டேபில் சென்று E-Nomination தேர்ந்தெடுத்து, YES கொடுத்து ஃபேமிலி டெக்லரேசனை அப்டேட் செய்ய வேண்டும்.
  • பின்னர், Add Family Details கிளிக் செய்து Nomination Details என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களையும் நாமினியாக் சேர்த்துகொள்ளலாம்.
  • இறுதியாக, ‘Save EPF Nomination’ஆப்ஷன் கிளிக் செய்து, அடுத்த பக்கத்தில் e-sign ஆப்சனை கிளிக் செய்ய வேண்டும்.
  • ஆதாருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி எண் வரும். அதனை திரையில் கேட்கப்படும் இடத்தில் பதிவிட வேண்டும். அவ்வளவு தான், நாமினி விவரம் கணக்குடன் இணைக்கப்பட்டுவிடும்.
#epf-e-nomination-last-date-extended, #epf-e-nominee-update-online, 
#how-to-update-epf-e-nomination, #how-to-update-e-nominee, 
#epf-e-nomination-process, 

Related Posts

கருத்துரையிடுக