பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்க பணம் வழங்கப்படுமா? இல்லையா? குழப்பத்தில் மக்கள்...
பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக அரசு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு தொகை வழங்கி வருகிறது.
அந்தப் பொங்கல் பரிசு தொகுப்பில் மளிகை பொருட்கள் மற்றும் ரொக்க பணமானது வழங்கப்படும்.
ஆனால் சில நேரங்களில் பொங்கல் பரிசு தொகப்பில் மளிகை பொருட்கள் அதாவது பொங்கல் தொகுப்பு மட்டுமே வழங்கப்படும் அதில் பச்சரிசி வெள்ளம் அல்லது சர்க்கரை கரும்பு வேட்டி சேலை உள்ளிட்ட பொருட்களை மட்டும் அரசனது வழங்கும்.
இந்த ஆணடு பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்க பணமானது ரூபாய் 5000 வரை அதிகபட்சம் வழங்கக் கூடும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர் காரணம் இந்த ஆண்டு தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி பொதுமக்கள் எதிர்பார்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்த ரொக்க பணம் ரூபாய் 5000 வழங்க வேண்டும் என பல்வேறு அரசியல் தலைவர்களும் வலியுறுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
ரொக்க பணம் எவ்வளவு வழங்கப்படும் என்பது அனைவரும மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது குறைந்தபட்சம் ரூபாய் 1000 முதல் 5000 வரை வழங்கப்படலாம் என பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
ஆனால் இன்றோ பொதுமக்கள் பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்க பணம் வழங்கப்படுமா என்ற சந்தேகத்தில் உள்ளனர்.
இதன் காரணம் தமிழக அரசு சார்பில் கைத்தறி துறை அமைச்சர் பொங்கல் பண்டிகளுக்கு வேட்டி மற்றும் சேலைகள் வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தமிழக அரசு பொங்கல் பரிசுக்கு ரூபாய் 248 கோடியை ஒதுக்கி அரசாணையை வெளியிட்டது.
ஆனால் இதுவரை ரொக்கப்பனம் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடாததால் பொதுமக்கள் குழப்பத்தில் உள்ளனர்.
இதற்கான பதில் கட்டாயம் ஜனவரி 3ஆம் தேதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசானது பொங்கல் பரிசு தொகுப்பை ஜனவரி 10ஆம் தேதிக்குள் வழங்கி முடிக்க ஏற்பாடு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Social Plugin