TTSE Result 2025 DGE Scholarship Test
தமிழ்மொழி இலக்கியத்திறனறித் தேர்வு முடிவுகள் வெளியீடு
தமிழ்மொழி இலக்கியத்திறனறித் தேர்வு (TTSE) எழுதிய மாணவச் செல்வங்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு!
தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE - Directorate of Government Examinations) நடத்திய தமிழ்மொழி இலக்கியத்திறனறித் தேர்வுக்கான முடிவுகள் இப்போது வெளியிடப்பட்டுள்ளது.
நீங்கள் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கீழேயுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பில் சென்று எளிதாக அறிந்துகொள்ளலாம்.
முடிவுகளைப் பார்ப்பதற்குத் தேவை:
உங்கள் பதிவெண் (Registration Number)
உங்கள் பிறந்த தேதி (Date of Birth)
முடிவுகளை உடனடியாக அறிய, இங்கே கிளிக் செய்யவும்:
👉 CLICK
தேர்வில் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் எங்களின் மனமார்ந்த வாழ்த்துகள்! 💐✨
தமிழ்மொழி இலக்கியத்திறனறித் தேர்வு உதவித்தொகை விவரம்
தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் (DGE) நடத்தும் இந்தத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்களுக்கு, பள்ளி கல்வித்துறை வாயிலாக உதவித்தொகை வழங்கப்படுகிறது.
உதவித்தொகை அளவு
தேர்ந்தெடுக்கப்படும் மாணவர்கள் எண்ணிக்கை: ஒவ்வொரு ஆண்டும் 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.
இதில், 50% (750 மாணவர்கள்) அரசுப் பள்ளி மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மீதமுள்ள 50% (750 மாணவர்கள்) அரசுப் பள்ளி மாணவர்கள் உட்பட பிற தனியார் பள்ளி மாணவர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மாதாந்திரத் தொகை: ஒரு மாணவருக்கு மாதம் ரூ. 1,500 வீதம் வழங்கப்படும்.
கால அளவு: இந்த உதவித்தொகை, மாணவர்கள் இரண்டு ஆண்டுகளுக்கு (11-ஆம் வகுப்பு மற்றும் 12-ஆம் வகுப்பு) வழங்கப்படும்.
Social Plugin