ஒரே நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1800 குறைந்தது 



சென்னையில் இன்று (அக் 30) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ஒரு சவரன் ரூ.88,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.225 குறைந்து ஒரு கிராம் ரூ.11,100க்கு விற்பனை ஆகிறது.

சர்வதேச நிலவரங்களால் நம் நாட்டில் கடந்த இரு வாரங்களாக, ஆபரண தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் காணப்படுகிறது. தமிழகத்தில் நேற்று முன்தினம் (அக் 28) ஆபரண தங்கம் கிராம் 11,075 ரூபாய்க்கும், சவரன் 88,600 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 165 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று (அக் 29) காலை, தங்கம் விலை கிராமுக்கு 135 ரூபாய் உயர்ந்து, 11,210 ரூபாய்க்கு விற்பனையானது.

சவரனுக்கு 1,080 ரூபாய் அதிகரித்து, 89,680 ரூபாய்க்கு விற்கப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 1 ரூபாய் உயர்ந்து, 166 ரூபாய்க்கு விற்பனையானது. நேற்று மாலை, மீண்டும் தங்கம் விலை, கிராமுக்கு 115 ரூபாய் உயர்ந்து, 11,325 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 920 ரூபாய் அதிகரித்து, 90,600 ரூபாய்க்கு விற்பனையானது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. நேற்று ஒரே நாளில் தங்கம் சவரனுக்கு 2,000 ரூபாய் அதிகரித்தது.

இந்நிலையில், இன்று (அக் 30) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ஒரு சவரன் ரூ.88,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.225 குறைந்து ஒரு கிராம் ரூ.11,100க்கு விற்பனை ஆகிறது. வெள்ளி விலை கிராமிற்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ.165க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Today Silver Rate Click

Gold Bond Click




Post a Comment

Previous Post Next Post