குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 சுதந்திர தினத்தில் தமிழக அரசு அறிவிப்பு? | Information in tamil

குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 சுதந்திர தினத்தில் தமிழக அரசு அறிவிப்பு?

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக தேர்தல் வாக்குறுதியில் திமுக வெற்றி பெற்றால் குடும்ப தலைவிக்கு ரூபாய் 1000 உரிமை தொகை வழங்கப்படும் என தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தனர் மேலும் இந்த வாக்குறுதி ஆனது திமுகவுக்கு பெரும் பலமாக அமைந்துள்ளது எனவும் அக்கட்சியினர் நம்புகின்றனர் எனவே இத்திட்டத்தை உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் நடைமுறைப்படுத்த வேண்டும் என அக்கட்சி தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

திமுக ஆட்சியை பிடித்தும் குடும்பத் தலைவிக்கு ரூபாய் 1000 உரிமைகளை வழங்கும் திட்டத்தை திமுக அரசு அறிவிக்காததால் தமிழகத்தில் உள்ள பெண்களிடம் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகள் ஆக உள்ள பாஜக மற்றும் அதிமுக கட்சிகள் குடும்பத் தலைவிக்கு ரூபாய் 1000 உரிமைகளை வழங்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று போராட்டங்களை நடத்தினர்.

சமூக வலைதளங்களிலும் இத்திட்டத்தை திமுக அரசு நிறைவேற்றாததால் பல்வேறு விமர்சனங்களை சந்தித்து உள்ளது குடும்பத் தலைவிக்கு ரூபாய் ஆயிரம் வழங்குவது பெட்ரோல் லிட்டருக்கு ரூபாய் ஐந்து குறைப்பு டீசல் லிட்டருக்கு ரூபாய் நான்கு குறைப்பு முதலிய திமுக தேர்தல் அறிக்கையில் உள்ள முக்கிய திட்டங்கள் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.

தற்போது நகர்புற உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற உள்ளதால் இதை அறிவித்தால் மட்டுமே திமுக அரசுக்கு சாதகமாக இருக்கும் என தகவல்கள் கிடைத்துள்ளது எனவே உள்ளாட்சித் தேர்தலை சந்திக்கவும் எதிர்க்கட்சிகளின் நெருக்கடியை சமாளிக்கவும் குடும்பத் தலைவிக்கு ரூபாய் ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு சுதந்திர தினத்தில் அறிவிக்கலாம் என முடிவு செய்துள்ளது.



Related Posts

கருத்துரையிடுக