12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பள்ளியில் வாங்க வேண்டிய சான்றிதழ்கள் என்ன? 12th Student Certificate | 12th Mark sheet | Information in tamil




பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பள்ளியில் வாங்க வேண்டிய சான்றிதழ்கள் என்ன?

பன்னிரண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் மாணவர்கள் தங்களுடைய மதிப்பெண் சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்வி படிக்க தாங்கள் படித்த பள்ளியில் பெற வேண்டிய சான்றிதழ்கள் விபரங்கள்
1. பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (10th Mark sheet)
2. பதினோராம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (11th Mark sheet)
3. பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் (12th Mark Sheet)
4. பன்னிரண்டாம் வகுப்பு மாற்றுச் சான்றிதழ்(Transfer Certificate)
5. நன்னடத்தை சான்றிதழ் (Contact Certificate)
6. பன்னிரண்டாம் வகுப்பு வருகை சான்றிதழ் (Attendance Certificate )
 மேற்கண்ட அனைத்து சான்றிதழ்களையும் மாணவர்கள் தங்கள் பள்ளியில் பெற்றுக் கொள்ள வேண்டும்.
மாணவர்கள் உயர்கல்வி படிக்கும் போது கல்வி உதவித்தொகையை பெற நன்னடத்தை சான்றிதழ் மற்றும் வருகை சான்றிதழ் முதலியவை தேவைப்படும் எனவே மாணவர்கள் இந்த சான்றிதழ்களையும் அவசியம் பெற வேண்டும்.

மேலும் மாணவர்கள் விண்ணப்பித்து பெற வேண்டிய சான்றிதழ்கள்
1. முதல் பட்டதாரி சான்றிதழ்
2. வருமான சான்றிதழ்
3. ஜாதி சான்றிதழ்

இந்த அனைத்து சான்றிதழ்களையும் மாணவர்கள் பெற்று தயார் நிலையில் இருந்தால் மாணவர் சேர்க்கையில் எந்தவித தடங்கலுமின்றி மாணவர்கள் தஙகள் சேர்க்கையை அந்தந்த கல்லூரிகளில் உறுதிப்படுத்தலாம்.

மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழை கீழே உள்ள இணையதளத்தில் பெறலாம்


முழுமையான தகவல் பெற இந்த வீடியோவை பார்க்கவும்


Related Posts

கருத்துரையிடுக