இலவச சமையல் எரிவாயு இணைப்புத் திட்டம்- மத்திய பட்ஜெட்டில்1கோடி பேருக்கு நீட்டிப்பு
உஜ்வலா எனப்படும் ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் மேலும் ஒருகோடி பேருக்கு நீட்டிக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
2021-2022 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சா் நிர்மலா சீதாராமன் இது தொடா்பாக மேலும் கூறியதாவது:
கரோனா தொற்றுபிரச்னையால் கடந்த ஆண்டுதேசிய பொது முடக்கம் அமல்படுத்தப்பட்ட போதும், எரிபொருள் விநியோகம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படவில்லை.
வாகனங்களுக்கான சிஎன்ஜி எரிபொருள் வழங்கும் நகா்ப்புற எரிவாயு விநியோகத்திட்டமும், குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்கும் திட்டமும்மேலும் 100 மாவட்டங்களுக்கு நீட்டிக்கப்படவுள்ளது.
இதுதவிர ஏழைக் குடும்பங்களுக்கு இலவசமாக எரிவாயு இணைப்பு வழங்கும் உஜ்வலா திட்டத்தின் மூலம், மேலும் ஒரு கோடி பயனாளிகள்பலனடையும் வகையில் நீட்டிக்கப்படுகிறது என்றார்.
Social Plugin