100,10,5 ரூபாய் நோட்டுக்கு தடையா? என்ன சொல்கிறது ரிசர்வ் வங்கி


பழைய 100,10,5  ரூபாய் நோட்டுகளுக்கு தடை விதிப்பது குறித்து ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.
இந்தியாவில் 2016 ஆம் ஆண்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது பணப் புழக்கத்தில் இருந்து உயர் மதிப்பு ரூபாய் 500 மற்றும் 1000 ஆகியவை செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. அவற்றுக்கு மாற்றாக புதிய 2000 ரூபாய் நோட்டுகள் புதிய வடிவிலான 500 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு புழக்கத்தில் விடப்பட்டன. பணப்புழக்கத்தை மேலும் அதிகப் படுத்துவதற்காக புதிய வடிவிலான ரூபாய் 200 ரூபாய் 100 ரூபாய் 50 ரூபாய் 20 ரூபாய் 10 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டன. இந்த நோட்டுக்கள் குறித்து பல்வேறு வதந்திகள் தொடர்ந்து பரவிக் கொண்டிருக்கின்றன.
 ரூபாய் 2000 நோட்டுகளுக்கு விரைவில் நீக்கப்படுவதாக தகவல் வெளியாகி வந்தன. 
இந்த நிலையில் பழைய 100 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் இருந்து நீக்குவதாக ரிசர்வ் வங்கி தரப்பில் செய்தி வெளியாகியுள்ளது. மாவட்ட அளவிலான பாதுகாப்பு குழுவில் மற்றும் மாவட்ட அளவிலான ரூபாய் தாள் மேலாண்மை குழு டிஎம்சி இணைந்து பங்கேற்ற கூட்டத்தில் பேசிய ரிசர்வ் வங்கியின் துணை பொது மேலாளர் பி.மகேஷ் பேசுகையில் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் பழைய ரூபாய் 100 ரூபாய் 10 ரூபாய் 5 ரூபாய் நோட்டுகளை புழக்கத்திலிருந்து நிற்க திட்டமிட்டு உள்ளதாக தெரிவித்தார். 
புதிய நீல நிற ரூபாய் 100 ரூபாய் நோட்டுகள் தற்போது புழக்கத்தில் அதிகமாக இருக்கும் நிலையில் பழைய 100 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறும் முடிவில் ரிசர்வ் வங்கி இருக்கிறது ஆனால் அரசு தரப்பில் இருந்து இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Related Posts

கருத்துரையிடுக