தமிழகத்தில் கட்டிடங்களுக்கு உள்கட்டமைப்பு கட்டணம் நிர்ணயம் - வீட்டுவசதி துறை | Information in tamil

தமிழகத்தில் கட்டிடங்களுக்கு உள்கட்டமைப்பு கட்டணம் நிர்ணயம்.
 தமிழகம் முழுவதும் 2 அடுக்குமாடி களுக்கு மேல் உள்ள கட்டிடங்களுக்கு உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுக்கான கட்டணம் வசூல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி மற்றும் வணிக வளாகம் கல்வி நிறுவனங்களில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுக்கான கட்டணம் சிஎம்டிஏ மற்றும் சென்னை மாநகராட்சி சார்பில் வசூலிக்கப்பட்டு வருகிறது. ஆனால் டிடிசிபி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இதுபோன்ற கட்டணங்கள் வசூலிக்கப்படுவதில்லை.
குறிப்பாக ஒரு சில பகுதிகளில் மட்டும் வளர்ச்சி கட்டணம் என்ற பெயரில் பெறப்பட்டு வந்தது. ஆனால் பெரும்பாலான பகுதிகளில் இது போன்ற கட்டடங்கள் வசூல் செய்யப்படுவதில்லை இதனால் அரசுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதற்கு தமிழ்நாடு பொது கட்டிட விதிகளின்படி போதிய தெளிவுரை இல்லாததே காரணம் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து டிடிசிபி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இரண்டு மாடிக்கு மேல் கட்டப்படும் கட்டிடங்களுக்கு உள்கட்டமைப்பு மற்றும் வசதிக்கான கட்டணம் வசூலிக்க வீட்டுவசதி துறை செயலாளர் கார்த்திகேயன் உத்தரவிட்டு அரசாணை வெளியிட்டு உள்ளார். அதன்படி உள்ளாட்சி அமைப்புகளில் இரண்டு மாடிக்குமேல் கட்டப்படும் கட்டிடங்கள் மற்றும் 300 சதுர அடிக்கு மேல் உள்ள வணிக வளாக கட்டிடங்களில் உள்கட்டமைப்பு மற்றும் வசதிகளுக்கான கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. அதன்படி வீடுகளுக்கு சதுர அடி ரூபாய் 375 வரையும், தொழிற்சாலைகளுக்கு சதுர அடி ரூபாய் 225 வரைக்கும், வணிகரீதியான கட்டிடங்களுக்கு சதுர அடி ரூபாய் 375 வரையும், கல்வி நிறுவனங்களுக்கு சதுர அடி ரூபாய் 150 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 
இதன் மூலம் உள்ளாட்சி அமைப்புகளுக்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து அகில இந்திய கட்டுனர் சங்கம் மாநில பொருளாளர் ராம் பிரபு கூறுகையில் சென்னை மாநகராட்சி சிஎம்டிஏ மூலம் அடுக்கு மாடி கட்டிடங்களுக்கு உள்கட்டமைப்பு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது ஆனால் தற்போது உள்ளாட்சி அமைப்புகளுக்கு உள்கட்டமைப்பு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றார் வீடுகளுக்கு சதுர அடி ₹305 வரையும், தொழிற்சாலைக்கு சதுர அடி ₹225 வரைக்கும், வணிகரீதியான கட்டிடங்களுக்கு சதுர அடி ₹375 வரையும், கல்வி நிறுவனங்களுக்கு சதுர அடி ரூபாய் ₹150 வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

Related Posts

கருத்துரையிடுக