பாலிடெக்னிக் இறுதிப் பருவத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு. ஏப்ரல் 2020 டிப்ளமோ / பாலிடெக்னிக் தேர்வு கட்டணம் செலுத்திய ரெகுலர் மற்றும் அரியர் தேர்வு எழுவதும் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தங்கள் கல்லூரியில் மாணவர்கள் தங்கள் பெயர், பதிவு எண், மொபைல் நம்பர், வாட்ஸப் நம்பர், இமெயில் ஐடி, மற்றும் தாங்கள் தற்போது இருக்கும் மாநிலம் முதலிய விவரங்களை தாங்கள் தேர்வு கட்டணம் செலுத்திய கல்லூரியில் விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என அறிவித்துள்ளனர்.
தேர்வுக்கான தேர்வு அட்டவணை செப்டம்பர் 21 அன்று வெளியாகும் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் ஆனது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முழுநேர டிப்ளமோ படிக்கும் மாணவர்களின் 6வது பருவத் தேர்வும் பகுதிநேர டிப்ளமோ படிக்கும் மாணவர்களின் 8வது பருவத்தேர்வு ஆன்லைனில் நடைபெறுகின்றது. இதனுடன் ஏற்கனவே கல்லூரி படிப்பை முடித்து ஏப்ரல் 2020 தேர்வு கட்டணம் செலுத்திய அரியஸ் மாணவர்களின் இறுதி பருவத்தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.