Pongal Parisu 2024 : பொங்கல் பரிசாக 1000 ரூபாய் விரைவில் வெளியாகிறது அறிவிப்பு!

 

Pongal Parisu 2024 : பொங்கல் பரிசாக 1000 ரூபாய்  விரைவில் வெளியாகிறது  அறிவிப்பு!

”Pongal Parisu 2024: குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் அறிவிப்பை நாளை மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார்”

பொங்கல் திருநாளையொட்டி தமிழக அரசு சார்பில் ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 

பொங்கல் திருநாளையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு சார்பில் பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கம் வழங்குவது வழக்கம். கடந்த ஆண்டும் ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. வரும் ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் கொண்டாடப்பட உள்ள நிலையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் அறிவிப்பை நாளை மறுநாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிடுகிறார். 

ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை,  ஒரு முழு கரும்பை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக விவசாயிகளிடம் இருந்து கரும்பை தமிழக அரசு கொள்முதல் செய்ய உள்ளது. இதற்காக 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு செலவிடப்பட உள்ளது. 

இது குறித்த ஆலோசனை கூட்டமும் முதலமைச்சர் தலைமையில் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. வரும் ஜனவரி 15ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத்தொகுப்பை வழங்க வேண்டும் என தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி அரசு தொடங்கியது. 

மேலும் வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 6 ஆயிரம் நிவாரண நிதியை அரசு அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வழங்கும் அறிவிப்பை விரைவில் அரசு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

#Pongal_Parisu2024

#Pongal_Parisu1000

#TN_Pongal_Parisu

Related Posts

கருத்துரையிடுக