10th Mark sheet | பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழை அக்டோபர் 4ஆம் தேதி முதல் பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம்.


தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் வருகிற October 4 ஆம் தேதி முதல் பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கரோனா பரவல்  காரணமாக பள்ளிகள் திறக்கப்பட முடியாத சூழ்நிலையில்,   2020-21 ஆம் ஆண்டுக்கான  10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. 
மேலும், 10 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த ஆகஸ்ட் 23 ஆம் தேதி, 10 ஆம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இணையத்தில் வெளியிடப்பட்டன. இதையடுத்து அசல் மதிப்பெண் சான்றிதழ் வருகிற அக்டோபர் 4 ஆம் தேதி முதல் பள்ளிகளில் மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் துறை தெரிவித்துள்ளது.

மார்ச் 2021, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடர்பான அசல் மதிப்பெண் சான்றிதழ்களை (Original Mark Certificates) அனைத்துப் பள்ளி மாணவர்களும் 04.10.2021 (திங்கள்கிழமை) அன்று காலை10 மணி முதல் தாங்கள் பயின்ற பள்ளியின் தலைமையாசிரியர் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.

மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள பள்ளிக்கு வருகை தரும் தேர்வர்கள்/பெற்றோர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ள பள்ளிக்கு வருகை புரியும் தேர்வர்கள்/பெற்றோர்கள் சமூக இடைவெளியினை  கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

#10thMarksheet2021
#10th-Orginal-Marksheet2021
#tamilnadu
#School-Marksheet
#sslc-Marksheet2021



Related Posts

கருத்துரையிடுக