அனைத்து கல்லூரிகளிலும் மார்ச் 31க்குள் தேர்வை முடிக்க தமிழக அரசு உத்தரவு ஆன்லைன் முறையில் தேர்வு
கரோனா தோற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் தமிழக அரசு கல்லூரி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு கல்லூரி மாணவர்களின் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்த அனுமதி அளித்துள்ளது.
மேலும் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களுக்கு மார்ச் 31-ஆம் தேதிக்குள் செய்முறை தேர்வு மற்றும் கல்லூரி இறுதி பருவத்தேர்வு நடத்தி முடிக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இது அனைத்து வகையான பலவகை தொழில்நுட்ப கல்லூரிகள் பொறியியல் கல்லூரிகள் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் முதலிய அனைத்து உயர்கல்வி கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் என அனைத்து கல்லூரிக்கும் இந்த உத்தரவு பொருந்தும்.
Social Plugin