கல்வி உதவித்தொகை 2020-21 பெற மாணவர்கள் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டிய ஆவணங்கள்

கல்வி உதவித்தொகை 2020-21 பெற மாணவர்கள் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டிய ஆவணங்கள்.

2020-2021 ஆம் ஆண்டு கல்வி உதவித்தொகை பெற அரசு அரசு உதவி பெறும் சுயநிதி பள்ளி கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள்  கல்வி உதவித்தொகை பெற வைத்திருக்கவேண்டிய முக்கியமான ஆவணங்கள்.

மாணவர்கள் நிலையில் தயார் நிலையில் வைக்கப்பட வேண்டியவை:

1.  மாணவரின் ஆதார் அட்டை
2. மாணவரின் / பெற்றோரின் கைபேசி எண்ணுக்கு கடவுச்சொல் (OTP One Time Password) வரப்பெறும் என்பதால், மாணவரின் /பெற்றோரின் கைபேசியில் செயல்பாட்டில் உள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
3. மாணவரின் ஆதார் எண் உடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கு விபரம்.
4. மாணவரின் வங்கி கணக்கிற்கு மின்னணு தீர்வை மூலமாக கல்வி உதவித் தொகையினை வரவு வைக்க ஏதுவாக வங்கி கணக்கில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது பணப்பரிவர்த்தனை மேற்கொண்டு செயல்பாட்டில் வைத்திருக்க வேண்டும். (Operative Account)
5. வட்டாட்சியரால் வழங்கப்படும் மாணவரது ஜாதிச் சான்று.  
6. வட்டாட்சியரால் வழங்கப்படும் குடும்ப ஆண்டு வருமான சான்று.
7. புகைப்படம் ( Photo Passport Size) 
8. துறையால் வழங்கப்பட்ட கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தில் உள்ள அனைத்து விவரங்களையும் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் கல்லூரிக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
2020 - 2021 கல்வி ஆண்டு முதல்  உதவி தொகை புதுப்பித்தல் மற்றும் புதிய விண்ணப்பங்களை இணையதளம் மூலம் குறிப்பிட்ட காலக்கெடுக்குள் விண்ணப்பிக்க மேற்காணும் ஆவணங்களை மாணவர்கள் தயார் நிலையில் வைத்திருக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றது.




Keyword: #SC_ST_Scholarship, #BC_Scholarship, #MBC_Scholarship, #Scholarship_upload_Document, #Government_Scholarship, #Scholarship2020-21,

Related Posts

கருத்துரையிடுக