மீன ராசி சனிப்பெயர்ச்சி பலன் : லாப சனி எப்படிப்பட்ட பலன்களைத் தரும்? | Meenam Sani Peyarchi Palangal 2020 to 2023 | Meena Rasi Sani Peyarchi Palangal 2020

 

மீன ராசி சனிப்பெயர்ச்சி பலன் : லாப சனி எப்படிப்பட்ட பலன்களைத் தரும்?

சனிப்பெயர்ச்சி 2020 நடக்கும் போது 11ல் சனி பகவான் அமர்ந்து, மீன ராசிக்கு நல்ல லாபத்தை தரக்கூடிய இடத்திற்கு வர உள்ளார். பாதக ஸ்தானமாக பார்க்கப்பட்டாலும், சனியால் மீன ராசியினர் நன்மைகளையே அதிகம் பெற உள்ளனர். சனியின் பார்வையால் எப்படிப்பட்ட பலன்களைப் பெற உள்ளனர் என்பதை விரிவாக காண்போம்...

லாப சனி பலன்

வாக்கிய பஞ்சாங்கத்தின்படி சார்வரி ஆண்டு மார்கழி மாதம் 12ம் தேதி (டிசம்பர் 27) சனி பெயர்ச்சி நிகழ உள்ளது. இந்த பெயர்ச்சியின் போது சனி பகவான் தனுசு ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதத்திலிருந்து, மகர ராசியில் உள்ள 2ம் பாதத்திற்குப் பெயர்ச்சியாக உள்ளார்.

மீன ராசிக்கு 11ம் இடமான மூத்த சகோதர, லாப ஸ்தானத்தில் சனி பகவான் சஞ்சரிக்க உள்ளார். இதனால் திருமணம் உள்ளிட்ட சுப காரியங்களை எதிர்நோக்கி இருக்கும் மீன ராசியினருக்கு சிறப்பாக சுப நிகழ்வுகள் நடக்கும். மறுமணம் செய்ய நினைப்பவர்களுக்கும் நல்ல நிகழ்வு நடக்கும்.

கவலைகள் நீங்கி வாழ்வில் புத்துணர்ச்சியைப் பெற்று உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். உங்கள் செயலில் லாபம் ஏற்படும்.

​உத்தியோகஸ்தர்களுக்கான பலன்

உங்களின் திறமை பளிச்சிடும். புதிய பொறுப்புகள், பதவிகள் உங்களைத் தேடி வரும். உங்களின் ஆலோசனையை மேலதிகாரிகள் எடுத்துக் கொள்வர்.

புதிய பெரிய அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும். அவர்களின் ஆலோசனைகள் உங்கள் தொழில், வியாபாரத்தில் பல புதிய திட்டங்களை தீட்டி அதன் மூலம் பல்வேறு வெற்றிகள் மற்றும் லாபங்கள் கிடைக்கும்.

கணினித் துறையில் உள்ளவர்களுக்கு தற்போது இருக்கும் இடத்தை விட நல்ல அதிக சம்பளத்துடன் கூடிய நல்ல வேலைக்கு மாற வாய்ப்புள்ளது.

சிலருக்கு இருக்கும் வேலையில் இடமாற்றம் நிகழலாம். உங்கள் வேலை தொடரபான ரகசியங்களை மற்றவர்களிடம் பகிர வேண்டாம். உங்கள் வேலையில் திருப்திகரமான நிலை இருக்கும்.

சிலருக்கு அவர்களின் தகுதிக்கேற்றார் போல உயர் பதவி, ஊதிய உயர்வை பெறுவீர்கள். நிதி நிலை உயரும் என்பதால் உங்களுக்கு இருந்த கடன் சுமை தீரும்.

​தொழில் / வியாபாரம் :

வியாபாரத்தில் இருந்த தேக்க நிலை நீங்கி, விற்பனை சூடுபிடிக்கும். வாடிக்கையாளர்களின் மனமறிந்து நடந்து கொள்வீர்கள். வெளிநாட்டு வியாபார ஒப்பந்தம் பெறுவீர்கள். வீடு, மனை விற்பனை செய்பவர்கள், சிமெண்ட் தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான நிலை இருக்கும்.

பணம் மற்றும் பொருள் கொடுக்கல், வாங்கலில் சற்று கவனமாக இருக்க வேண்டும். எதிர்பார்த்த லாபம் உங்கள் தொழிலில் கிடைக்கும். இறக்குமதி, ஏற்றுமதி தொழில் செய்பவர்களுக்கு சாதகமான நிலை இருக்கும். உங்களின் வேலையாட்கள் மூலம் அனுகூல நிலை இருக்கும்.

மிகவும் அதிர்ஷ்ட பலனைப் பெறக்கூடிய ராசிகளில் ஒன்றாக மீன ராசியினர் உள்ளனர்.

​பெண்களுக்கான பலன் :

திருமணமான பெண்களுக்கு ஆடை, ஆபரண யோகங்கள் உண்டாகும். vஏலை பார்க்கும் பெண்களுக்கு பணி சூழலும், குடும்ப சூழலும் சாதகமானதாக இருக்கும். பணியில் இருந்த தேக்க நிலை மாறும். உங்களின் செயல்பாட்டுக்கு கணவரின் ஆதரவு இருக்கும்.

தாய்வழியில் உங்களுக்கு ஆதரவான சூழல் இருக்கும். திருமண பாக்கியமும், குழந்தைப் பேறு உண்டாகும்.

கல்வி :

மாணவர்கள் சற்று கவனத்துடன் படிக்க நீங்கள் நினைத்த மதிப்பெண் இலக்கை அடைய முடியும். மேல்படிப்புக்கு நீங்கள் விரும்பும் கல்லூரி, பள்ளிகளில் இடம் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். கல்வி தொடர்பான பயணங்களும், சில அலைச்சல்களும் ஏற்படக்கூடும். கல்வியில் மேன்மையான பலன்களை நீங்கள் பெறுவீர்கள்.

பரிகாரம் :

சனிக்கிழமைகளில் அனுமன் வழிபாடு செய்வதும், ஜெய் ஸ்ரீ ராம் என்ற அற்புத மந்திரத்தை உச்சரித்து வாருங்கள்.

மகான்கள், சித்தர்களின் ஆலயங்களில் தரிசனம் செய்வது நல்லது. கோயில் உழவாரப் பணிகளில் ஈடுபடுவதும். ஏழை. எளியோருக்கு உதவிகளை செய்வது நல்லது.

மதுரையில் உள்ள இன்மையில் நன்மை தருவார் சிவன் கோயிலுக்கு சென்று வருவது நல்லது. முடியாதவர்கள் அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று வருவது நல்லது.

அடுத்த இராசிகான சனி பெயர்ச்சி பலன்கள் பார்க்க 

 Click

Related Posts

கருத்துரையிடுக