பல்கலைக்கழகம் / கல்லூரி - இளங்கலை இறுதியாண்டு - வகுப்புகள் தொடக்கம் :

 


பல்கலைக்கழகம் / கல்லூரி - இளங்கலை இறுதியாண்டு - வகுப்புகள் தொடக்கம் :

அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் :


1. 2020 - 2021 - ம் கல்வியாண்டில் சேரும் முதலாம் ஆண்டு மாணாக்கர்களுக்கு மட்டும் 01-02-2020 - ல் ஆரம்பிக்க அனுமதி.


2. கல்லூரிகள், "மாணாக்கர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் / ஊழியர்களுக்கு போதுமான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 


3. கொரோனா காரணமாக கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு வெளியில் இருக்கும் கல்லூரிகளை மட்டுமே திறக்க அனுமதி. 


4. கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் மாணவர்கள் / பேராசிரியர்கள் / பணியாளர்களுக்கு, கல்லூரிக்குள் அனுமதி கிடையாது. 


5. "ஆரோக்கிய சேது" செயலியை பதிவிறக்கம்  செய்து வைக்க மாணாக்கர்கள் மற்றும்  பேராசிரியர்களை அறிவுறுத்த வேண்டும். 


6. கல்லூரி வளாகத்துக்குள்,  உணவருந்தும் வேலை தவிர மற்ற நேரம் முழுவதும் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். 


7. அனைவரும் சமூக இடைவெளி (6 அடி தூரம்) கட்டாயம் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, நிர்வாக அலுவலகம், ஆராய்ச்சி கூடம் மற்றும் நூலகங்களில் இதை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.


8. மொத்த மாணாக்கர்களில், 50% மேல் எந்த நேரத்திலும் இல்லாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.


9. கல்லூரிக்கு மாணாக்கர்கள் வரவழைக்கப்பட்டாலும் "ஆன்லைன்" வகுப்புகள் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும்.


10. துறை (Department) சம்பந்தமாக ஏதேனும் தகவல் பெறுவதற்காக மொத்தமாக மாணவர்கள் வருவதை / கூடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். அதற்கேற்றபடி முன் அனுமதி வழங்கி சந்திக்க கூறவேண்டும். 


11. நேரடி வகுப்புகளை தவிர்த்து "ஆன்லைன்" வகுப்புகள் கேட்கும் மாணாக்கர்களுக்கு தேவையான பாட உபகரணங்களை கல்லூரி வழங்க வேண்டும். 


12. கல்லூரிக்கு வரும் மாணாக்கர்கள் / பேராசிரியர்கள், உடல்வெப்ப நிலையை பரிசோதிக்க வேண்டும்.


13. முகக்கவசம் மற்றும் கையுறை அணிய அறிவுறுத்துவதோடு, ஏதேனும் அறிகுறியுடன் வரும் மாணவர்களை அடையாளம் காணவேண்டும். 


14. படிப்பு சாராத இதர செயல்பாடுகளில் சமூக இடைவெளியை பின்பற்ற முடியாத பட்சத்தில், அந்த வேலையை தவிர்க்க வேண்டும்.


15. சமூக இடைவெளியை பின்பற்றி வாரத்துக்கு 6 நாட்கள் வகுப்புகள் நடத்தலாம். 


16. கல்வி நிறுவனங்களின் தேவைக்கேற்ப கற்பித்தல் நேரம் நீட்டிக்கப்படலாம். 


17. வகுப்பறையில் சுழற்சி முறையில் மொத்த மாணவர்களில் 50 சதவீதம் மாணாக்கர்களுக்கு மிகாமல் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். 


18. வகுப்பறை, ஆய்வகக்கூடம், கணினிக்கூடம் (கம்ப்யூட்டர் Lab) மற்றும் நூலகங்களில் இரு இருக்கைகளுக்கு இடையில் ஒரு இருக்கையை காலியாக விடவேண்டும். 


19. விடுதியில் அதிக மாணவர்களை சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.


20. விடுதி மாணாக்கர்கள் கல்லூரி அருகில் அவர்களுடைய உறவினர்கள் வீட்டில் தங்கி படிப்பதை ஊக்குவிக்க வேண்டும்.


21. விடுதி அறையை பகிர்வது கட்டாயம் கூடாது. எந்த சூழ்நிலையிலும் நோய் அறிகுறி இருக்கும் மாணவர்களை விடுதியில் தங்க அனுமதிக்கவே கூடாது. 


22. வெவ்வேறு இடங்களில் இருந்து விடுதிக்கு வரும் மாணாக்கர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைக்கவேண்டும்.


23. வெளியூர் / விடுதி மாணாக்கர்கள் தங்களுக்கு "கொரோனா இல்லை" என்ற சான்றிதழோடு வந்தாலும், அவர்களை சோதிக்க திட்டமிட வேண்டும். 


24. விடுதியின் அனைத்து பகுதிகளையும் சுத்தமாக  / சுகாதாரமாக பராமரிக்க வேண்டும்.


25. சாப்பிடும் அறையில் (கேன்டீன்/மெஸ்) மாணாக்கர்கள் அதிகம் கூடுவதை தவிர்க்கவேண்டும்.

Related Posts

கருத்துரையிடுக