2020ல் சனிப்பெயர்ச்சி எப்போது | Sani peyarchi 2020 Date | Information in tamil

 


2020
ல் சனிப்பெயர்ச்சி எப்போது

குரு பெயர்ச்சி முடிந்த நிலையில், அடுத்து பலரை குழப்பி வரும் கேள்வியாக சனிப் பெயர்ச்சி எப்போது என்ற கேள்வி தான். இரண்டு 2020 ஜனவரி 24ஆம் தேதி, டிசம்பர் 26ஆம் தேதி என இரு தினங்கள் சொல்லப்படுகின்றதே என்ற குழப்பம் நிலவுகின்றது.

சனிப் பெயர்ச்சி எப்போது?
வாக்கிய பஞ்சாங்கம், திருக்கணித பஞ்சாங்கம் என ஜோதிடத்தில் இரு வகையான பஞ்சாங்கத்தை நாம் பின்பற்றி வருகின்றோம்.

அந்த வகையில் திருக்கணித பஞ்சாங்கத்தின் படி ஜனவரி 24ஆம் தேதி சனிப் பெயர்ச்சி என்றும்,

 

வாக்கிய பஞ்சாங்கப்படி டிசம்பர் 26ஆம் தேதி சனிப் பெயர்ச்சி நிகழ்வு நடக்க உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

எங்கு சனி பெயர்ச்சி ஆகிறார்?
சனி பகவான் காலபுருஷ லக்கினமான 9வது இடமான தனுசு ராசியிலிருந்து 10வது இடமான மகர ராசிக்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.
திருக்கணித பஞ்சாங்கமோ, வாக்கிய பஞ்சாங்கமோ எந்த ஜோதிட முறையாக இருந்தாலும் சனி பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் என்பது மட்டும் ஒன்றே.



இருப்பினும் இரு பஞ்சாங்களுக்கிடையே 11 மாத வித்தியாசம் ஏன் என்ற கேள்வி தான் எழுந்து வருகின்றது.


யாருக்கு ஏழரை சனி முடிகிறது?
இந்த சனி பெயர்ச்சியால் விருச்சிக ராசியினருக்கு ஏழரை சனி முடியப்போகின்றது.
அதே சமயம் கும்ப ராசிக்கு ஏழரை சனி விரய சனியாக செல்லப்போகின்றார்.


வாக்கிய பஞ்சாங்கம்:
வாக்கிய பஞ்சாங்கம் என்பது பழங்காலமாக திருக்கோயில்களில் தற்போது கடைப்பிடித்து வரும் அமாவாசை, பெளர்ணமி உள்ளிட்ட பல்வேறு பஞ்சாங்க ரீதியான விஷயங்களை அடக்கி, ஒரு குரு தன் சிஷ்யனுக்கு சொல்லுவது போன்று வாய் வழியாக இன்று வரை பரிமாறப்பட்டு வந்துள்ள பஞ்சாங்கத்தை குறிப்பதாகும். இது துல்லியமாக்க இருக்குமா என்பது நாம் கூற இயலாது. கணித ரீதியாக இல்லாதது.

Related Posts

கருத்துரையிடுக