தீம் படங்களை வழங்கியவர்: Igniel. Blogger இயக்குவது.

Ads Top

Home Ads

Tags

Latest in Sports

Popular Posts

சிம்ம ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 | Simmam Sani Peyarchi Palangal 2020 to 2023 | Sani Peyarchi Palangal 202o in tamil

 

சிம்ம ராசி சனிப்பெயர்ச்சி பலன்கள் 2020-2023 : முயன்றால் சிகரத்தைத் தொடலாம்!

சனி பெயர்ச்சி 2020 சார்வரி ஆண்டு நிகழ்வு வாக்கிய பஞ்சாங்க அடிப்படையில் மார்கழி 12ம் தேதி (டிசம்பர் 27) அதிகாலை 5.22 மணிக்கு துவாதசி திதியில் நிகழ உள்ளது. இந்த நிகழ்வின் போது சனி பகவான் தனுசு ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதத்திலிருந்து மகர ராசி உத்திராடம் பாதம் 2க்கு பெயர்ச்சி ஆக உள்ளார்.

​சிம்ம ராசிக்கு அதிர்ஷ்டம் அடிக்கப்போகுது!

மகர ராசி அதிபர் சனி பகவானாக இருந்தாலும், சனி பகவான் செல்ல உள்ள மகர ராசியில் இருக்கும் உத்திராடம், திருவோணம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களுக்கு முறையே சூரியன், சந்திரன், செவ்வாய் அதிபதியாக உள்ளனர். சூரியனின் நட்பு கிரகங்களாகச் சந்திரன், செவ்வாய் ஆகிய கிரகங்கள் உள்ளன.

அதனால் சிம்ம ராசிக்கு பெரியளவில் பாதிப்பை தரமாட்டார்.

சனியின் பார்வை :

இதுவரை சிம்ம ராசிக்கு 5ம் இடமான பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்தார். இனி ராசிக்கு 6ம் இடமான ரண, ருண, ரோக சத்ரு ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்.

சனி பகவான் 3, 7, 10 ஆகிய இடங்களை தனது சிறப்பு பார்வையால் பார்த்து நற்பலன்களை வழங்குவார்.

சனி பகவான் தன் 3ம் பார்வையால் அஷ்டம ஸ்தானமான விரய ஸ்தானத்தையும், 7ம் பார்வையால் சுக ஸ்தானத்தையும், தனது 10ம் பார்வையால் தொழில், கூட்டாளி ஸ்தானத்தையும் பார்க்கிறார்.

2021, 2022 எப்படி இருக்கும்?

2021 எப்படி இருக்கும்?

குரு மற்றும் ராகு -கேது அமைப்பின் காரணமாக உங்களின் வேலை சார்ந்த விஷயங்கள் செயலில் தாமதமாகும். குரு நீச்சமாக இருப்பதால் சரியான ஆலோசனை கிடைக்காமல் போகலாம். தேவையில்லாத விஷயத்தில் சிக்கலாம். அதனால், தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பது நல்லது.

2022 எப்படி இருக்கும்?

2022ல் சனி பாதக நிலையில் இருந்தாலும் குரு உங்கள் ராசிக்கு 7ல் சஞ்சரிப்பதால் நல்ல பலன்களைப் பெற முடியும். இதுவரை இருந்த குடும்ப சிக்கல், தொழில் சிக்கல்கள் நீங்கி ஒரு சுமூகமான நிலை இருக்கும்.

மறைவு ஸ்தானத்தில் சனி:

சனி பகவான் 6ல் சஞ்சரித்திருப்பதால் அவருக்கு மறைவு ஸ்தானமாக அமைவதால், எந்த ஒரு ராசிக்கும் மறைவு ஸ்தானத்தில் சனி நல்ல பலன்களைத் தான் தருவார் என்பதால் உங்கள் ராசிக்கு பெரிய நல்லது செய்யாவிட்டாலும் கெடுதல் ஏற்படாது நம் முயற்சியில் அனைத்தும் சிறப்பாக நடக்கும்..

உத்தியோகஸ்தர்கள், ​பெண்களுக்கான பலன் :

பெண்களுக்கான பலன் :

குடும்பத்தில் உங்கள் மீதான மதிப்பு மரியாதை அதிகரிக்கும். இதுவரை இருந்த திருமண தடை நீங்கி விரைவில் திருமணம் யோகம் உண்டாகும். இளைய சகோதர / சகோதரிகளிடம் சமரச போக்கை கடைப்பிடிக்கவும். சண்டை வேண்டாம். ஆடை, ஆபரணங்கள் வாங்க வாய்ப்புகள் உண்டு.

உத்தியோகஸ்தர்களுக்கு :

உத்தியோகத்தில் இருந்த தடைகளும், குழப்பங்களும் நீங்கி தெளிவான முன்னேற்ற பாதை பிறக்கும். கிடப்பில் கிடந்த வேலையை சிறப்பாக செய்டு முடிப்பீர்கள். புதிய பதவி, சம்பள உயர்வை எதிர்பார்க்கலாம். புதிய வேலை முயற்சியில் வெற்றி கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு உங்களுக்குச் சாதகமாக இருக்கும். வேலை விஷயமாக வெளியூர் சென்று வர வாய்ப்புள்ளது.

​தொழில் / வியாபாரம் எப்படி இருக்கும் :

தொழில் / வியாபாரிகளுக்கு :

பெரிய முதலீடு செய்யும் போதும், புதிய தொழில் முயற்சிகளை மேற்கொள்ளும் போது, துறை ரீதியான ஆலோசனை மற்றும் நிதானம் தேவை. கூட்டுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்குப் பங்குதாரர், கூட்டாளிகள் மூலம் மன வருத்தம் ஏற்படக்கூடும். பொறுப்புகளும், பணிச்சுமையும் அதிகரிக்கும்.

மாணவர்களுக்கு :

கல்வி, கேள்வியில் நல்ல முன்னேற்றமும். நல்ல சிறப்பான மதிப்பெண் பெற வாய்ப்புள்ளது. உங்களின் தனித்திறமை வெளிப்படும். விளையாட்டில் வெற்றியும், பரிசு,பாராட்டு கிடைக்கும்.

அரசியல்வாதி / கலைஞர்களுக்கு :

அரசியல் :

அரசியல், பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சற்றி பணிச்சுமை அதிகரிக்கும். எந்த விஷயத்திலும் பேச்சு, செயலில் நிதானத்தை கடைப்பிடித்து நல்ல பலனைத் தரும். சிலருக்கு இருந்த மன சஞ்சலங்கள் நீங்கி புதிய எண்ணங்கள், வெற்றிகள் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு :

கலைஞர்களுக்கு பல வகையில் ஏற்றம் மிகுதியான காலமாக இருக்கும். பயணங்களால் சோர்வு, உடல் பிரச்னைகள் ஏற்படும்.. உணவு விஷயத்தில் கவனம் செலுத்துவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேண முடியும். உங்கள் பயணங்களால் உடல் அசதி ஏற்படும்.

வழிபாடு :

பிள்ளையார்பட்டி சென்று விநாயகர் வழிபாடு செய்வது நன்மை தரும்.

ஸ்ரீவாஞ்சியத்தில் உள்ள சந்தோஷ சனிபகவானை தரிசித்து வர நன்மைகள் பெருகும்.

அருகில் உள்ள விநாயகர் கோயிலுக்கு குறிப்பாக கற்பக விநாயகர் வழிபாடு நன்மையை தரும்.

திருவண்ணாமலை சென்று வருவது நல்லது.

அவசரத்தை விட்டாலே அனைத்தும் நன்மை தரும்.

 அடுத்த இராசிகான சனி பெயர்ச்சி பலன்கள் பார்க்க 

 Click

Related Posts

கருத்துரையிடுக