இன்றைய ராசி நட்சத்திர பலன்கள் Rasi Palan Today September 9 2025

 

இன்றைய  ராசி நட்சத்திர பலன்கள் 

Rasi Palan Today September 9 2025

ஆவணி: 𝟮𝟰 செவ்வாய் கிழமை 09.09.2025 ராசி- பலன்கள்  

🔯 மேஷம் -ராசி: 🐐

வெளியூர் தொடர்பான பயணங்கள் ஈடேறும். சமூகப் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தில் சுபகாரியம் தொடர்பான செலவுகள் உண்டாகும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். விடாப்பிடியான சிந்தனைகளை குறைத்துக் கொள்ளவும். மாற்றம் நிறைந்த நாள்.


💠அதிர்ஷ்ட திசை : தெற்கு 

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்.


⭐அஸ்வினி : பயணங்கள் ஈடேறும். 

⭐பரணி : வாதங்களை தவிர்க்கவும். 

⭐கிருத்திகை : சிந்தனைகளில் கவனம்.

♉ ரிஷபம் - ராசி: 🐂

குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். சொத்துக்கள் மூலம் வரவுகள் அதிகரிக்கும். வித்தியாசமான ஆடைகள் மீது ஆர்வம் ஏற்படும். தனிப்பட்ட விஷயங்களில் கவனம் வேண்டும். தவறிய சில பொருட்கள் பற்றிய குறிப்புகள் கிடைக்கும். மனதிற்கு பிடித்த விதத்தில் வீட்டில் சிறு சிறு மாற்றங்களை செய்வீர்கள். வெற்றி கிடைக்கும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : மேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 8

💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.


⭐கிருத்திகை : செல்வாக்கு அதிகரிக்கும். 

⭐ரோகிணி : வரவுகள் அதிகரிக்கும். 

⭐மிருகசீரிஷம் : மாற்றங்கள் பிறக்கும்.

♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍

அரசு சார்ந்த நிலைப்பாடுகளை புரிந்து கொள்வீர்கள். வியாபார பணிகளில் லாபங்கள் மேம்படும். சமூக பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். உயரதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உருவாக்கும். உறவினர்கள் வழியில் ஒத்துழைப்புகள் ஏற்படும். கால்நடை பணிகளில் ஈடுபாடு உண்டாகும். கவலை மறையும் நாள்.


💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 7

💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் நீல நிறம்.


⭐மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.

⭐திருவாதிரை : ஆர்வம் அதிகரிக்கும். 

⭐புனர்பூசம் : ஈடுபாடு உண்டாகும்.


♋ கடகம் - ராசி: 🦀

சகோதரர்கள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும். தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். இறை சார்ந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். கொடுக்கல் வாங்களில் புதிய அனுபவம் கிடைக்கும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றமான சூழல் அமையும். சக ஊழியர்களின் மறைமுக ஆதரவுகள் கிடைக்கும். லாபம் நிறைந்த நாள்.


💠அதிர்ஷ்ட திசை : வட கிழக்கு

💠அதிர்ஷ்ட எண் : 5

💠அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்.


⭐புனர்பூசம் : ஒத்துழைப்பு கிடைக்கும். 

⭐பூசம் : அனுபவம் கிடைக்கும்.

⭐ஆயில்யம் : ஆதரவுகள் கிடைக்கும். 

♌ சிம்மம் - ராசி: 🦁

புதிய நபர்களிடம் தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும். நண்பர்கள் மூலம் அலைச்சல்களும் புதிய அனுபவங்களும் உருவாகும். பணவரவுகளில் ஏற்ற இறக்கமான சூழ்நிலை உண்டாகும். வீடு வாகன தொடர்பான விரயங்கள் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான சோர்வுகள் வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் வழியில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். கவனம் வேண்டிய நாள்.


💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு

💠அதிர்ஷ்ட எண் : 4

💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.


⭐மகம் : வாதங்களை தவிர்க்கவும். 

⭐பூரம் : ஏற்ற இறக்கமான நாள்.

⭐உத்திரம் : வேறுபாடுகள் நீங்கும். 


♍ கன்னி - ராசி: 👩

வெளியூர் பயணங்களில் ஆதாயம் அதிகரிக்கும். எண்ணியதை நிறைவேற்றிக் கொள்வதற்கான சூழல் அமையும். உறவினர்களிடம் இருந்து வந்த வேறுபாடுகள் குறையும். வியாபாரத்தில் நல்ல செய்திகள் கிடைக்கும். சுப காரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். கலகலப்பான பேச்சுகளால் நட்பு வட்டம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். அலைச்சல் நிறைந்த நாள்.


💠அதிர்ஷ்ட திசை : தெற்கு

💠அதிர்ஷ்ட எண் : 3

💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.


⭐உத்திரம் : ஆதாயம் அதிகரிக்கும்.

⭐அஸ்தம் : வேறுபாடுகள் குறையும். 

⭐சித்திரை : அன்பு அதிகரிக்கும். 



♎ துலாம் - ராசி: ⚖
நெருக்கமானவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். பயணம் மூலம் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். உறவுகள் பற்றிய புரிதல் உண்டாகும். கடன் சார்ந்த செயல்களில் சிந்தித்து செயல்படவும். கால்நடை பணிகளில் மேன்மை உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிப்புகள் உயரும். வியாபார பணிகளில் மேன்மை ஏற்படும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு 
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : லேசான நீலம்.

⭐சித்திரை : மதிப்பளித்து செயல்படவும்.
⭐சுவாதி : சிந்தித்து செயல்படவும். 
⭐விசாகம் : மேன்மையான நாள்.


♏ விருச்சிகம் - ராசி: 🦂
உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். அக்கம் பக்கம் இருப்பவர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். பயணங்கள் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். உடல் ஆரோக்கிய விஷயங்களில் கவனம் வேண்டும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பங்கள் ஏற்படும். கல்வியில் ஆர்வமின்மை ஏற்பட்டு நீங்கும். தாமதம் குறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐விசாகம் : ஒத்துழைப்பான நாள்.
⭐அனுஷம் : அனுபவம் ஏற்படும். 
⭐கேட்டை : ஆர்வமின்மையான நாள். 

♐ தனுசு - ராசி:  🏹
உறவுகள் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். சிந்தித்து செயல்படுவதன் மூலம் நன்மைகள் உண்டாகும். புதிய நபர்களால் சில மாற்றமான தருணங்கள் ஏற்படும். வியாபாரம் முதலீடுகளில் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கவும். ஆன்மீக பணிகளில் ஆர்வம் உண்டாகும். பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை நிறம்.

⭐மூலம் : புரிதல்கள் அதிகரிக்கும். 
⭐பூராடம் : மாற்றமான நாள்.
⭐உத்திராடம் : அனுபவங்கள் கிடைக்கும்.


♑ மகரம் - ராசி: 🦌
முயற்சிக்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். வரவுகளில் இருந்த தாமதம் விலகும். மனதில் புதுவிதமான தேடல்கள் உண்டாகும். பிரபலமானவர்களின் அறிமுகங்கள் ஏற்படும். வேலையாட்களின் ஒத்துழைப்புகள் கிடைக்கும். விமர்சன பேச்சுக்கள் தோன்றி மறையும். குறுகிய தூர பயணங்கள் மூலம் மாற்றம் ஏற்படும். வரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

⭐உத்திராடம் : அங்கீகாரம் கிடைக்கும். 
⭐திருவோணம் : தேடல்கள் உண்டாகும். 
⭐அவிட்டம் : மாற்றம் ஏற்படும்.

♒  கும்பம் - ராசி: 🍯
வாசனை திரவிய பணிகளில் மேன்மை உண்டாகும். தாய் வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். அத்தியாவசியமான தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடத்தில் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் வரவுகள் சாதகமாக இருக்கும். சிக்கல் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர் பச்சை நிறம்.

⭐அவிட்டம் : மேன்மை உண்டாகும். 
⭐சதயம் : மனக்கசப்புகள் நீங்கும். 
⭐பூரட்டாதி : வரவுகள் சாதகமாகும்.


♓ மீனம் - ராசி:  🐟
புதிய முயற்சிகளில் சிந்தித்து செயல்படவும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் தோன்றி மறையும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். வியாபாரம் நிமித்தமான பயணங்கள் கைகூடிவரும். சக ஊழியர்களிடத்தில் அளவுடன் இருக்கவும். சஞ்சலமான சிந்தனைகளால் சிறு சிறு குழப்பங்கள் தோன்றி மறையும். அசதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐பூரட்டாதி : சிந்தித்து செயல்படவும்.
⭐உத்திரட்டாதி : கருத்துக்களில் கவனம்.
⭐ரேவதி : குழப்பங்கள் மறையும்.

இன்றைய ராசி பலன்கள்