10th Result Date 2023 Tamil nadu 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி?

10th Result Date 2023 Tamil nadu 




10th Result Date 2023 Tamil nadu தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் மே மாதம் 19ம் தேதியன்று வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.

2023 கல்வியாண்டிற்கான 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் 06.04.2023 முதல் 20.04.2023 வரையிலான நாட்களில் நடைபெற்றது. மாநிலம் முழுவதும் 5.01 லட்சம் மாணவர்கள், 4.75 லட்சம் மாணவிகள் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில், இதற்கான தேர்வு முடிவுகள் வரும் 19ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுளளது.

12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. 8, 36,593 மாணவர்கள் தேர்வெழுதிய நிலையில், 7,55,451 மாணவர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். தேர்ச்சிப் பெற்றவர்களின் விகிதம் 94.03 ஆகும். மாணவர்களை விட மாணவிகளை கூடுதலாக தேர்ச்சிப் பெற்றுள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 4.93% அதிகம் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு இந்த எண்ணிக்கை 5.36% ஆக இருந்தது.

Tamilanzone Whatsapp Group link Join
TN Education News Whatsapp Group LinkJoin

Related Posts

கருத்துரையிடுக