TNEB மின்சார வாரியத்தில் அப்ரண்டிஸ் பயிற்சி நேர்காணல் தேதி அறிவிப்பு
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சென்னை மின் பகிர்மான வட்டத்தின் கீழ் இடம்பெறும் மேற்பார்வை பொறியாளர் தெற்கு இரண்டாவது கட்டிடத்தில் தொழில் பழகுனர் காண அப்ரண்டிஸ் பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.
இந்தாண்டு தொழில் பழகுனர் காண நேர்காணல் தேதி ஆனது அறிவிக்கப்பட்டுள்ளது இதில் கீழ்க்கண்ட பிரிவினருக்கு தொழில் பயிற்சியானது வழங்கப்படுகின்றது.
பதவிகள்
எலக்ட்ரீசியன் - 56 நபர்
கம்பியாளர் - 59 நபர்
சர்வேயர் - 2 நபர்
கணினி இயக்குநர் - 5 நபர்
கருவி மெக்கானிக் - 4 நபர்
கட்டிடவியல் வரைவாளர் -4 நபர்
தேர்வு செய்யப்பட உள்ளனர் இவர்களுக்கான நேர்காணல் தேதி அக்டோபர் மாதம் 20ஆம் தேதி மற்றும் அக்டோபர் 21ஆம் தேதி ஆகிய இரு தினங்களில் இவர்களுக்கான நேர்காணல் ஆனது 10:30 மணி முதல் மாலை 5:30 மணி வரை மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் சென்னை மின் பகிர்மான வட்டம் தெற்கு 2 , அண்ணா மெயின் ரோடு, கே கே நகர், சென்னை 78 ல் நடைபெறும்.
பயிற்சி காலம் ஓர் ஆண்டு
மாதம் உதவி தொகை ரூபாய் 8050
நேர்காணல் செல்பவர்கள் கல்வி அசல் சான்றுகளை எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்.
கல்வித்தகுதி: ஐடிஐ முடித்தவர்கள்
#TNEB_apprentice_2021
#Apprentice-training