திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் தரிசிக்க ஆன்லைன் மூலம் முன்பதிவு - பிரசாதங்கள் தபால் மூலம்


திருநள்ளாறு சனீஸ்வரன் கோயிலில் தரிசிக்க ஆன்லைன் மூலம் முன்பதிவு  - பிரசாதங்கள் தபால் மூலம்

திருநள்ளாறு சனீஸ்வரன்கோயிலில் வரும் 27ஆம்தேதியன்று சனிப்பெயர்ச்சிவிமரிசையாக நடைப்பெறஉள்ளது. பக்தர்கள் அதிகளவில்கூடுவார்கள் என்பதால் நளன்குளத்தில் பக்தர்கள் குளிக்கதடை விதித்து காரைக்கால்மாவட்ட ஆட்சியர் உத்தரவுபிறப்பித்துள்ளார்.
சனிப்பெயர்ச்சி விழாவைமுன்னிட்டு வரும் 19ம் தேதிமுதல் ஆன்லைனில் முன்பதிவுசெய்பவர்களுக்கு மட்டுமேகோயிலில் வழிபடவும்,பூஜைகள், அபிஷேகநிகழ்வுகளில் கலந்து கொள்ளஅர்ச்சனை செய்யஅனுமதியில்லை என்றுஅறிவித்துள்ளார் மாவட்டஆட்சியர்.

திருநள்ளாறு சனிபகவான்நவகிரக தலங்களில் மிகமுக்கியமான தலமாகும்.சனீஸ்வர பகவன் தனிசன்னதியில் பொங்குசனியாகஅருள்பாலிக்கிறார். தன்னைவேண்டி வரும் பக்தர்களுக்குவேண்டிய வரத்தை பக்தர்களைதுன்பங்களிலிருந்துவிடுவிக்கிறார். சனிபகவான்ஒவ்வொரு ராசியிலும்இரண்டரை ஆண்டுகள்சஞ்சரிப்பார். ஒரு ராசியிலிருந்துமற்றொரு ராசிக்குஇடப்பெயர்ச்சி ஆவார்.

வாக்கிய பஞ்சாங்கப்படி சர்வாரி தமிழ் ஆண்டு வரும் மார்கழி 12, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 05.22 மணிக்கு தனுசு ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 1ம் பாதத்திலிருந்து, மகர ராசியில் உள்ள உத்திராடம் நட்சத்திரம் 2ம் பாதத்திற்கு இடப்பெயர்சி அடைகிறார்.

சனி பகவானுக்கு உரிய ஸ்தலமாக திருநள்ளாறுவில் உள்ள ஸ்ரீ தர்ப்பனேஸ்வரர் கோயிலில் சனி பெயர்ச்சி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது.

Related Posts

கருத்துரையிடுக