பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நவம்பர் 16ம் தேதி முதல் 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.

அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு எழுந்தது. மேலும் அரசியல் கட்சி தலைவர்கள் பள்ளி திறப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து தமிழகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து பெற்றோரிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது.

இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. பெற்றோர் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையில் இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளது.

 

பள்ளிகள் திறப்பு தேதி குறித்து சூழ்நிலைக்கு ஏற்ப முடிவெடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.

மேலும் டிசம்பர் 2ம் தேதி முதல் முதுநிலை இறுதி ஆண்டு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மாணவர்களுக்கு கல்லூரிகளை திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திறக்கப்படும் கல்லூரிகளில் மட்டுமே மாணவர்களுக்கு விடுதிகள் திறக்கப்படும். இதற்கான நிலையான வழிகாட்டு நெறிமுறைகள் பின்னர் வெளியிடப்படும் என அரசு அறிவித்துள்ளது. மற்ற மாணவர்களுக்கு ஏற்கெனவே நடைபெற்று வரும் இணையவழி கல்விமுறை தொடரும் எனவும் தெரிவித்துள்ளது.

 

 

Related Posts

கருத்துரையிடுக